ADVERTISEMENT

ஃபிளாப் ஆன மூவிக்கான டிரெய்லர் போன்று ஆளுநரின் உரை

12:55 PM Jan 02, 2019 | tarivazhagan

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அமமுக கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல், மாற்று உடை இல்லாமல், உணவு இல்லாமல் 15 நாட்களாக நடு வீதியில் நின்றிருந்தனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சரென யாரும் புயல் பாதித்த பகுதிக்குள் செல்லக்கூட முடியாத நிலை இருந்தது. இதுவரை இதுபோல் நடந்ததாக யாரும் கேள்விப்பட்டதுமில்லை. ஆனால் ஆளுநர் உரையோ ஆட்சி சிறப்பாக உள்ளது என்பது போல் இருக்கிறது, ஆனால், உண்மையில் நிலைமை வேறாக உள்ளது.

ADVERTISEMENT

பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக கூறப்படும் ஆளுநரின் உரையில் அது சம்பந்தமாக எதுவும் இல்லை. பொங்கல் பரிசாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ 1,000 தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய விலைவாசிக்கு ஒரு குடும்பத்திற்கு அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியுடன், இவர்கள் சொல்வதெல்லாம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி போல் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கவேண்டும் அப்போதுதான் ஆளுங்கட்சியின் பலம் தெரியவரும். திருவாரூர் இடைத்தேர்தலின் அமமுக வேட்பாளர் குறித்த கேள்விக்கு வரும் 4-ம் தேதி நிர்வாகக்கூட்டம் நடைபெறவுள்ளது அதன் பின் வேட்பாளரை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஃபிளாப் ஆன மூவிக்கான டிரெய்லர் போன்று ஆளுநரின் உரை இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT