தமிழக சட்டப்பேரவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.
இதேபோல் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் வெளிநடப்பு செய்தார்.