அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கூட்டமானது தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் நேற்று அனுமதி அளித்திருந்தார். அது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.