Advertisment

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாணவ அமைப்புகளும், இயக்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமை தாங்கினார்.