/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/afsafsssfsfsfs.jpg)
நேற்று விழுப்புரம் வருகை தந்த சட்ட அமைச்சர்சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் வரை மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடத்த கூடாது என ஒரு நல்ல முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்துள்ளார். தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பது வரவேற்கக் கூடியதாக உள்ளது. இருந்தாலும் அதிகப்படியான அளவில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இதை பரிசீலனை செய்ததில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வது மிக மிக குறைவாக உள்ளது.மேலும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் நாலு பேருக்குத் தான் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதை உணர்ந்துதான் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் மருத்துவராக வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசுமருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கவர்னர் ஒப்புதல் பெற்ற பிறகு அமலுக்கு வந்தால் இந்த ஆண்டே கண்டிப்பாக குறைந்தபட்சம் 300 முதல் 325 அரசு பள்ளி மாணவ மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பில் சேரும் ஒரு நல்ல வாய்ப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்தித் தந்துள்ளார். விரைவில் அதற்கான ஒப்புதலை கவர்னர் அளிப்பார். அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார் அமைச்சர் சண்முகம்.
மேலும்,திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பியின்வெளிநாட்டு கம்பெனிகளில் பணம் முதலீடு செய்து பங்குகளை வாங்கியது குறித்தும், அதனால் அவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதுகுறித்தும்கேட்டபோது, அப்படிப்பட்டவர்கள்தான் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்கு நன்கு புரியும் என்றார் அமைச்சர் சண்முகம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)