ADVERTISEMENT

‘ஆளுநரின் முடிவு வரவேற்கத்தக்கது’ - அமைச்சர் துரைமுருகன்

03:56 PM Jan 10, 2024 | ArunPrakash

வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கினார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அண்மையில் தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழையின் காரணமாக அந்த பகுதிகளில் 750 ஏரிகளை உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதனையும் சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆட்சியாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றார்கள் அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. அதனையும் செலுத்தி, மேலும் மக்களுக்கான அரசின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு சரி செய்து வருகிறது. துணைவேந்தர் நியமன குழுவை ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது” என்றார்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு சிலர் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரும்பாலானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் பிசுபிசுத்தது” என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியத்தில் அழுத்தம் கொடுப்பீர்களா என கேட்டதற்கு அவர்களிடம் கூறத்தான் முடியும் அழுத்தம் எப்படி கொடுக்க முடியும் என கூறினார்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT