dmk

Advertisment

புதுக்கோட்டைக்கு வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மாவட்ட திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்ட காத்திருந்தனர். ஆனால் ஆளுநர் வருகை தரும் முன்பே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ban

இதையடுத்து, புதுக்கோட்டைக்கு வருகை தந்த ஆளுநர், அங்கு புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி சார்பில் சில இடங்களில் கொட்டி வைத்திருந்த குப்பையை கூட்ட ஆளுநரை அழைத்தனர். அந்த இடத்தில் நகராட்சி துப்புறவு பணியாளர்களும் காத்திருந்தனர்.

Advertisment

banw

ஆனால் ஆளுநர் பன்வாரிலால் அந்த இடத்திற்கு செல்லாமல் அடுத்து ஒரு சந்துக்குள் சென்றார். அங்கே குப்பைகளும் பிராந்தி பாட்டில்கள் நிறைந்து கிடந்தது. அதைப் பார்த்து டென்சன் ஆனார். கூடவே அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் சென்றனர்.