Advertisment

ஆளுநர் தமிழிசையின் தாயார் மறைவு - தலைவர்கள் நேரில் அஞ்சலி! (படங்கள்) 

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 79) இன்று (18/08/2021) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயாரின் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது கணவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Advertisment

அதேபோல், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட தலைவர்களும்,அரசு உயரதிகாரிகளும்ஆளுநரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

GOVERNOR TAMILISAI SOUNDARARAJAN leaders
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe