j

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தீபாவளித் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், " வாய்மையும், அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை நமக்கு இந்த திருநாள் உணர்த்துகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லவும், அறியாமை என்னும் நிலையிலிருந்து மேலான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லவும், மனச் சோர்விலிருந்து விடுபட்டு பேரின்பத்தைப் பெறவும் இந்த நாள் நமக்கு ஊக்கமளிக்கிறது. மக்களிடையே ஒற்றமையுணர்வையும், நல்லெண்ணத்தையும், தோழமை உணர்வையும் வலுப்பெறச் செய்வதுடன், சமுதாய தொண்டாற்றவும் நமக்கு ஊக்கமளிக்கிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment