Advertisment

பிபின் ராவத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் அஞ்சலி! 

Governor of Tamil Nadu pays tribute to Bipin Rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

Advertisment

Governor of Tamil Nadu pays tribute to Bipin Rawat

இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்காக திருச்சி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல இயலாமல் போனது. அதனால், முப்படைகளின் தளபதியான பிபின் ராவத் உருவப் படத்திற்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் அனைவரும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

RN RAVI bipin rawat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe