Advertisment

மகா புஷ்கர விழா! கவர்னர் பங்கேற்பு

நெல்லை தாமிரபரணியின் மகா புஷ்கர விழா 144 ஆண்டுகட்குப் பின் நேற்று துவங்கியது, பாவங்களைப் போக்க புனித நீராட வட புலத்தவர் உட்பட மக்கள் கூட்டம் லட்சக்கணக்கில் திரளும் என்ற எதிர்பார்ப்பிற்கேற்ப பிரச்சாரங்களும் சூடு பிடிக்கின்றன.

Advertisment

இதில் முக்கிய அம்சமாக, நேற்றுதேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் மகா புஷ்கர விழாவைப் பாபனாசத்தில் துவக்கி வைத்தார்.

Advertisment

governor

கவர்னர் வருகைக்கு முன்பேதாமிரபரணியின் வழியோர தீர்த்தஸ்தலங்களில் படிக்கட்டுகள் சில செப்பனிட்டும், பல செப்பனிடப்படாமலும் உள்ள படிகளை செப்பனிட ஏற்பாடும் செய்யப்பட்டது. கவர்னர் வருகையால் ஜடாயு தீர்த்தமான அருகன்குளம் படிக்கட்டுகள் சீரமைக்கும் பணிகள் முன்னரேவேகமெடுக்கபட்டன.

governor

கவர்னர் வருகையை முன்னிட்டும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பரணி பாயும் வழியோரப் பகுதிகளை ஆய்வு செய்ய வந்த தென் மண்டல ஐ.ஜி.யான சண்முகராஜேஷ்வரன் நெல்லையில் முகாமிட்டுருந்தார்.பாபனாசம், கல்லிடைக்குறிச்சி, தாமிரபரணீஸ்வரர், மானோந்தியப்பர் உள்ளிட்ட படித்துறைகளை ஐ.ஜி. சண்முகராஜஸ்வரன்பார்வையிட்டு பாதுகாப்பு குறித்தஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.ஆற்றின் தன்மை குறித்து காசிநாதர் படித்துறை கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, செயலர் பண்ணை சந்திரசேகரன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

governor

மேலும் அவர்களிடம் நீச்சல் தெரிந்தவர்கள் உள்ளார்களா? என்றும் வினவப்பட்டு பாதுகாப்பு கருதி பொதுவான அறிவுரைகளையும்கொடுத்துதிருந்தார்கள். இப்படி பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அடுத்துநேற்று நடந்த புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து தாமிரபரணியில்நீராடினார்.

pushkar festival panvarilal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe