நாகாலாந்து தினம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது; “தமிழ்நாடுஅதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம்அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்று பேசினார்.