TTV

புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மாவட்டம் முழுவதும் பதாகைள் வைக்கப்பட்டுள்ளது பல இடங்களில் முதல்வரே என்ற வாசகத்துடன் பதாகைகள் இருப்பதால் பலருக்கும் குழப்பம் நீடித்தது இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போது.

Advertisment

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல் விரைவில் நடைபெற இருக்கின்ற இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலில் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.குட்கா ஊழலில் வேறு யாரையும் மாட்டி விடக்கூடாது என்பதற்காக விஜயபாஸ்கருக்கு மேலும் பதவி கொடுத்து உள்ளனர்.

Advertisment

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலையில் அற்புதம்மாள் சொன்னதைப் போல இதில் அரசியல் தலையீடு வேண்டாம் என்ற அடிப்படையில் கவர்னர் விடுதலை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றோ நாளையோ பதவி பறிபோகுமா என்ற பயத்தில் உள்ளார் இதை அதிமுக நிர்வாகிகளே என்னிடம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தற்போது அதிமுகவினர் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் பேசி வருகின்றனர். தம்பிதுரை பேச்சு பாஜகவினர் அதிமுக கதவை சாத்திவிட்டனர் என்பதை காட்டுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் நம்ம விஞ்ஞானி செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் எல்லாம் அவரது தொகுதியிலயே டெபாசிட் இழந்து வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். கடம்பூர் ராஜூ எந்த பாதுகாப்பும் இல்லாம அவர் தொகுதி கிராமங்களுக்குள் சென்று பாதிப்பில்லாம திரும்பட்டும் அப்பவே எங்க எம்எல்ஏக்களை அவர் கூட அனுப்பி வைக்கிறேன்.

பாஸ்கரன் புதிக கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு.. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வேறு கட்சியில்இருக்க கூடாதா என்ன? தமிழகத்தில் நடக்கும் எப்பாடி ஆட்சி செயல் இழந்து விட்டது இதற்கு உதாரணம் சிறைத்துறை சொகுசு வாழ்க்கை இதற்கு சிறைத்துறை மந்திரி தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

Advertisment