Advertisment

'விடுதலை விவகாரம் அவர்களுக்கு இடையேயானது' - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில்! 

court

Advertisment

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநரின்ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது தற்பொழுது வரை தமிழக ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில், பல்வேறுதரப்பினரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.அதேபோல உச்சநீதிமன்றமே எழுவர்விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காததற்கு தனது அதிருப்தியைதெரிவித்திருந்தது. அண்மையில் தமிழக ஆளுநர்டெல்லி சென்றிருந்தபோதுகூட எழுவர் விடுதலை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சி.பி.ஐக்கு எந்தப் பங்கும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது சி.பி.ஐ தரப்பு.பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளசி.பி.ஐ தரப்பு, விடுதலை விவகாரம் என்பது பேரறிவாளனுக்கு ஆளுநருக்கும் இடையேயானது. இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும்தரவேண்டியஅவசியம் இல்லைஎனவும்தெரிவித்துள்ளது.

governor perarivaalan supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe