மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி எதிர்ப்பை கண்டித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு இந்தி திணிப்பு செய்யக்கூடிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தி திணிப்பை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை முற்றிலுமாக மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் இந்திய நாட்டினுடைய மொத்த ஒற்றுமையும் சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தலாகவே இருக்கும். தமிழகத்தில் ஆளுநர் மூலமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு இவராக ஒரு கொள்கை சொல்கிறார், இவரே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கிறார், இவரே பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டத்தை போடுகிறார், இவரே சட்டங்களை அறிவிக்கிறார், அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எதற்கு'' என்றார்.

Advertisment