Advertisment

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பிரேமலதா சந்திப்பு!

Governor RNRavi meeting with Premalatha

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதோடு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரேமலதா விஜயகாந்த் ஆளுநரிடம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe