தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை இரவு மீண்டும் ஆளுநர் சென்னை திரும்புகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அண்மையில் தமிழகத்தில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டிருந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழக ஆளுநரை சந்தித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆளுநர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.