தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 7ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை தமிழக அரசுக்கு நேற்று திருப்பி அனுப்பினார். மேலும் சபாநாயகர் இந்த மசோதாவை மறுஆய்வு செய்ய ஆலோசனை வழங்கியிருந்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசும் அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தமிழக ஆளுநர் வரும் 7ம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சருடன் அவர் சந்தித்து பேச வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.