பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவரின் தியாகங்களை அவர் நினைவுக் கூர்ந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.