Advertisment

ஆளுநர் வருகை; தேனியில் கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

Governor Ravi in Theni by DMK alliance parties showing black flag

Advertisment

தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மதுரை விமான நிலயத்திலிருந்து சாலை வழியாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார்

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் செயலைக் கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறுசெய்வதைக் கண்டித்தும் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடிகளைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உட்பட கட்சித்தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பழைய பஸ் நிலையம் அருகே தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Theni
இதையும் படியுங்கள்
Subscribe