தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் வந்தார். அங்கிருந்து தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றவர் சிறிது ஓய்வுக்கு பின் இராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவரது மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் அவர்களிடம் நலம் விசாரித்தார். ஆளுநர் வருகையொட்டி இராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
பாலாஜி.