Advertisment

விசிக தலைவர் தொல். திருமாவளவன் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில், தமிழ் நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை கண்டித்துசென்னை சின்னமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதில் “சனாதன சக்தியே, ஆர்.என்.ரவியே, ஆர்.எஸ்.எஸ் தொண்டரே திரும்பிப் போ தமிழ்நாட்டில் இடமில்லை” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் நடத்தஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி தொண்டர்களைகாவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

raj bhavan RN RAVI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe