Advertisment

மாணவர்களுடன் கலந்துரையாடும் ஆளுநர்; பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Governor interacting with Annamalai University students

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(4.10.2023) மாலை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ரவி செவ்வாய்க்கிழமை மாலை சாலை வழி மார்க்கமாக அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார். இதனைத்தொடர்ந்து அவர் இன்று 10 மணிக்கு மேல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா ஆதனூர் கிராமத்தில் உள்ள திருநாளைப் போவார் என அழைக்கப்படும் நாயன்மார்களில் ஒருவரான நந்தனாரின் பிறந்த இடத்தில் உள்ள கோவிலுக்கு செல்கிறார்.

Advertisment

இந்த நிலையில் முன்னதாக அவர் பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம்தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல், அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிமாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ஆனால் இந்நிகழ்விற்கு பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

students
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe