Advertisment

தமிழக அரசுக்கு ஆளுநர் வாழ்த்து!

Governor congratulates the Government of Tamil Nadu!

Advertisment

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திமுகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட முக்கிய 6 திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும் பேரவையில் பேசிய ஸ்டாலின், ''29C பேருந்தில் பயணித்துத்தான் நான் பள்ளிக்குச் சென்றேன்; அந்த வழித்தடப் பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 29C பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன்'' என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவின் அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வருக்கும், அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்துக்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe