Advertisment

கையெழுத்து போட்டுத்தான் ஆகவேண்டும் என ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 The Governor cannot be compelled to sign - Minister Jayakumar interview

Advertisment

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடுவழங்குவது குறித்தமசோதா மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஒரு சட்டத்தை உருவாக்க சொல்லி அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.ஆளுநரை பார்த்து அழுத்தம் கொடுத்தோம். ஆனால் சட்ட விதிப்படி நீங்கள் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த முடியுமா... முடியாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவைகொண்டுவந்த பெருமை அதிமுகவிற்கும் முதல்வருக்கும் போகக்கூடாதுஎனதிமுக நடத்துகின்றகபட நாடகம் தான் இந்த போராட்டம்என்பது எங்கள் நிலை" என்றார்.

Medical Student governor jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe