Skip to main content

கையெழுத்து போட்டுத்தான் ஆகவேண்டும் என ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published on 23/10/2020 | Edited on 23/10/2020
 The Governor cannot be compelled to sign - Minister Jayakumar interview

 

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா  மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஒரு சட்டத்தை உருவாக்க சொல்லி அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரை பார்த்து அழுத்தம் கொடுத்தோம். ஆனால் சட்ட விதிப்படி நீங்கள் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த முடியுமா... முடியாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவை கொண்டுவந்த பெருமை அதிமுகவிற்கும் முதல்வருக்கும் போகக்கூடாது என திமுக  நடத்துகின்ற கபட நாடகம் தான் இந்த போராட்டம் என்பது எங்கள் நிலை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்தது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Jayakumar has told what happened while filing nomination in North Chennai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அதிமுகவினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் 5 பேர் மட்டுமே அனுமதி., ஆனால் திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு, வேட்பாளர், மேயர் பிரியா உள்ளிட்ட 20 பேரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். நான் முதலில் இங்கே வந்தேன் அப்போது, வேட்புமனு டோக்கன் கேட்டேன். ஆனால் அலுவலர் வேட்பாளரிடம் தான் டோக்கன் வழங்குவோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்று வந்துவிட்டேன். ஆனால், எங்கள் வேட்பாளர் மனோ வந்தவுடன் 7 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு பிறகுதான் திமுக வேட்பாளர்கள் வந்தார்கள் அவர்களுக்கு 8 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

திமுகவினர், வேட்பாளர்கள் வருவதற்கு முன்பே டம்பி வேட்பாளர் மூலம் 2 ஆம் நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதனால் நாங்கள் தான் முறையாக வந்தோம்; நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றோம். ஆனால் திமுகவினர் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றனர். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் நடந்ததை கூறினார். பின்பு தலைமை தேர்தல் அதிகாரி, முதலில் அதிமுக தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளே இருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார்” என்றார்.