/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kl.jpeg)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 936 மாணவர்களுக்குத்தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று 84 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 936 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் நேரடியாக 1235 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். மீதி உள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் படங்களை வழங்குவதற்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம. கதிரேசன், பதிவாளர் சீதாராமன் உள்ளிட்ட கல்விக் குழு உறுப்பினர்கள் அனைத்து துறைத்தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)