Advertisment

'மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்'-ஆளுநர் ஒப்புதல்

 Governor approves 'Representation for the Disabled'

Advertisment

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இது தொடர்பானசட்ட மசோதா தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவதற்கான மற்றும் 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவதற்கான மசோதா அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

tn assembly governor TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe