Governor approves online gambling ban bill

Advertisment

ஆன்லைன்சூதாட்ட தடைமசோதா இரண்டாம்முறையாகசட்டப்பேரவையில்நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டஆன்லைன்சூதாட்டமசோதாவிற்குதமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்குபின் கடந்தமார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். அதில், 'பந்தயம், சூதாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மீது மட்டுமே மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். திறன்களை வளர்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது எனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது. இதுபோன்ற சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில சட்டப் பேரவைக்கு இல்லை. திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெட்டிங் உள்ளிட்ட அதிர்ஷ்டத்தால் வெல்லக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே மாநில பட்டியலில் 34வது பிரிவில் இருக்கிறது.’ என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்துமீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்குஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. மறுபுறம்தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல்கட்சிதலைவர்கள்கண்டனங்களைப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்டஆன்லைன்சூதாட்ட தடைமசோதாவிற்குதமிழகஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளமசோதாப்படி'ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படும். ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.