Advertisment

மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகில் அமைந்துள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பென்ஜமின் ஆகியோர் கலந்துக்கொண்டு காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.