Advertisment

சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

governor about sujith issue

4 நாட்கள் நடந்த மீட்பு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் இன்று அதிகாலை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது. சுஜித்தை இழந்து வாடும் பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமையை தரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

surjith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe