
கடந்த அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டை ஒட்டியுள்ள அமைந்தகரைபகுதியில்அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு சதுர அடி 13500 ரூபாய் என குறைந்த விலையில்கொடுத்துகடந்த அதிமுக அரசுஅரசாணை பிறப்பித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
அந்தபுகாரில், அன்றைய முதல்வர்எடப்பாடி பழனிசாமி, அன்றைய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் திருத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில் இந்த நிலம் சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான நிலம் என அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, மனுதாரர் வைத்தகோரிக்கையைநிராகரித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசின் நிலத்தை முழுமையாக மீட்டு வேலி அமைத்து பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)