இதைப்பற்றி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால் அரசுப்பள்ளிக்கு வர வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர் மற்றும்ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு ஆணை..தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில்விடுமுறை நாட்களில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி சேர்க்கை பேரணிகள் பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும்தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும்,கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும்தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய காலக்கட்டத்தில்தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில்நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு.உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்கு பணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா??தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒரு ஆணை. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால்,புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்றும் ஓர் ஆணை..இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர்!!! என்னன்னு சொல்றது இதை..
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தைஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துமேயானால்
அரசு பள்ளி நலன் பெறுமே!!தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா..பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி.அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது.நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள்.கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள்.ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது..தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது.10 &12ம் வகுப்பு தேர்ச்சியா..அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா..வாசித்தல் திறன் ஆய்வு உண்டா.அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா..ABL SALM ALM முறைகள் உண்டா..இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோதுஅரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு..என்ன அரசோ.. என்ன ஆணையோ என்றார்..