தலைமை செயலகத்தில் வேலைவாங்கி தருவதாக 3 லட்சம் வாங்கி மோசடி செய்த தலைமை செயலக அரசுஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் பாலாஜி என்பவர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை தலைமை செயலகத்தில் சட்ட துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த ராமு என்ற குணசேகரன் தான் உட்பட எட்டுபேரிடம் சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறி சுமார் 3 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி தங்களை ஏமாற்றியுள்ளார் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் ராமு என்கிற குணசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.