ADVERTISEMENT

வனத்துறையில் 50 பேருக்கு அரசு பணி... தேர்தல் விதிமீறலா?

08:02 PM Mar 22, 2019 | jeevathangavel

சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது. புதியதாக இந்த வனத்தில் 50 வனக்காப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணியிடத்திற்கு ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றிபெற்றவர்களை நியமனம் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.

ADVERTISEMENT

இங்கு மட்டும் 50 வனக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் என இரண்டு வனக்கோட்டங்களில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் என ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இதில் வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் நீண்ட காலமாக. நிரப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது புதியதாக தேர்வு செய்யப்பட்ட வனக்காப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட வனச்சரகங்களுக்கு சென்று பணியில் சேர்ந்துள்ளனர். இதன்படி சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 23 ஆண் வனக்காப்பாளர்களும், 8 பெண் வனக்காப்பாளர்களும், ஆசனூர் வனக்கோட்டத்தில் 12 ஆண் வனக்காப்பாளர்களும், 7 பெண் வனக்காப்பாளர்களும் என மொத்தம் 50 வனக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக சேர்ந்துள்ள வனக்காப்பாளர்களுக்கு ஒருவாரத்தில் 6 மாதகால பயிற்சி கோவையில் வனத்துறை சார்பில் அளிக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வனக்காப்பாளர் பணி ஏற்கனவே தேர்வின் மூலம் நடத்தப்பட்டாலும் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசு பணி வழங்குவது தேர்தல் விதிமீறல் இது தெரியாமல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவின்படி வனத்துறை உயர் அதிகாரிகள் ஐம்பது பேருக்கு வனக்காப்பாளர் பணி உத்தரவு வழங்கியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது என்கிறார்கள் வனத்துறையை சேர்ந்தவர்களே.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT