லெட்டர் பேடால் அடித்ததால் பெண் தட்டச்சர் தலையில் ரத்தக்காயம்! -‘மேலானவர்’ மீதே குற்றச்சாட்டு!

சில தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக இருக்கும். அப்படியேஎழுதிவிடவும் முடியாது. ‘அவமதிப்பு’ என்றாகிவிடும். போட்டோ ஆதாரம்இருக்கிறதே! போகிறபோக்கில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

government woman employee issue

சரி, விஷயத்துக்கு வருவோம்! முத்துக்குளிக்கும் ஊரில் மேன்மையானதுறையில் பணிபுரியும் பெண் ஊழியர் அவர். மேலான இடத்தில் இருப்பவர்சொன்னதை முறையாகத் தட்டச்சு செய்யவில்லையாம். வந்ததே கோபம்மேலானவருக்கு. கையிலிருந்த லெட்டர் பேடினால் ஓங்கி தலையில்அடித்துவிட்டாராம். ரத்தக்காயமே ஏற்பட்டுவிட்டது என்று போட்டோவைஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

பெண் ஊழியரை அடித்த ‘மேலானவர்’ பதவி விலகவேண்டும் என்றுவாட்ஸ்-ஆப்பில் கோரிக்கைகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த அளவுக்கு மோசமாகவா நடந்துகொள்ள முடியும்? சட்டத்துக்கே வெளிச்சம்!

woman
இதையும் படியுங்கள்
Subscribe