/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks4434_8.jpg)
சிந்து என்ற 17 வயது மாணவி, மாவட்ட அளவிலான கைப்பந்து வீராங்கனையாவார் , இவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து படுத்த படுக்கையாகிவிட்டார். இந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு விரிவான புனரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது
உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு உட்காரவும், நடக்கவும்முடியாத சூழலில் உள்ளார். ஆனாலும் மனம் தளராத சிந்து தனது நம்பிக்கையை இழக்கவில்லை, அவளுடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் அவளுடைய தேர்வுக்குத் தயாராகிறார். கடந்த வாரம் தனது பெற்றோரின் உதவியால் நடைமுறைத் தேர்வுகளிலும் கலந்து கொண்டார்.
இவரது நிலையை அறிந்த தமிழக முதல்வர் அவர்கள் அவரது மருத்துவச்செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை அவரதுஅதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!" கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)