தேனி மாவட்டம்சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி நடக்க முடியாத தனது தந்தை மற்றும் மனநலம் பாதிக்கபட்ட தாயரை பார்த்து கொண்டு படிக்க வசதி இல்லாமல் உள்ளது குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்திஒளிபரப்பானது. இந்தச் செய்தியினை பார்த்த பலரும் அனிதாவை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் இந்தச் செய்தி துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1b26c353-9055-48be-9fce-721e60601109.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் மற்றும் அவரது மகள் அனிதாவை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்திரவிட்டார்.
இதனைதொடர்ந்து அவரின் நேர்முக உதவியாளர் ராஜா, சங்கரலிங்கபுரத்திற்கு சென்று சந்திரசேகருக்கு போர்வை, தலையணைகளை வழங்கியதோடு, முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினையும் வழங்கினார். மேலும் சந்திரசேகரின் வீட்டினை பார்வையிட்டு துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்றார். இதனை அடுத்து உடனடியாக வீட்டினை இடித்து நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய வீட்டினை உடனடியாக கட்டிக் கொடுக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். புதிய வீடு கட்டுவதற்காக அளவீடு செய்யும் பணி உடனடியாக தொடங்கி முடிக்கப்பட்டு புது வீட்டிற்கான சாவியை நேரில் வழங்கினார் ஒபிஎஸ்.மேலும் அனிதாவின் குடும்ப செலவிற்கு மாதந்தோறும் 3000 ரூபாயினை அவரது வங்கி கணக்கில் அளிக்க உள்ளதாகவும், அனிதாவின் படிப்பு செலவு மட்டுமின்றி அவரின் திருமண செலவுகள் வரை அனைத்தையும் தான் ஏற்று கொள்வதாகவும் துணை முதல்வர் ஒபிஎஸ் உறுதி அளித்து இருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)