சென்னையில் இன்று (15.03.2023) அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் எனவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணி பல்லவன் இல்லம் முன்பு தொடங்கி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.