government transport employees chennai high court order

குறித்த காலத்திற்குள் வழங்கப்படாத பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வுக்கால பணப்பலன்களுக்கு, ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாகப் பணியாற்றிய ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வுக் காலப் பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ‘தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கிலும் ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டி வழங்கவேண்டும். இந்தத் தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாதத் தவணைகளாக வழங்க வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் வட்டித் தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டி வழங்க வேண்டும். அந்தத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.