Advertisment

அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் மாநாடு 

Government Transport Corporations Workers Federation Conference

Advertisment

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் 15வது மாநாடு 2ஆம் தேதி முதல் வருகின்ற 4ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நேற்று திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. யின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி.யின் மண்டல தலைவர் நேரு துரை, மண்டல பொதுச்செயலாளர் சுப்ரமணியன், துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், சி.பி.ஐ திருச்சி மாநகர செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் செப்டம்பர் 2019 முதல் ஊதிய உயர்வு அமலாக்குவது, சர்வீஸ் காலம், பணி உயர்வு, பதவி உயர்வுக்கு, ஏற்ப பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் சம்பள நிலையை உயர்த்துவது. பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு பற்றாக்குறை நிதி ஒதுக்குவது, போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது, மேம்படுத்துவது. கடுமையான தண்டனை முறைகளை கை விடுவது. 2022 செப்டம்பர் 15வது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை விவாதித்து அதை முன்னெடுத்து செல்வதற்கான எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மாநாட்டில் போக்குவரத்து துறை, நகராட்சி வளர்ச்சி துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சுப்பராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe