தமிழகத்தில் இன்று (07/02/2020) முதல் அரசு மதுபானக்கடையான டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 40 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர்பாட்டிலின் விலை 2014க்கு பிறகும், மற்ற மதுபானங்களின் விலை 2017ம் ஆண்டுக்கு பிறகும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3,100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.