சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் மாநில தலைவர் டாக்டர் அறம் ஆகியோர் சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
“மதுரை அரசு மருத்துவமனையில் மின் வெட்டு காரணமாக 5 நோயாளிகள் உயிர் இழந்த விவகாரம் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். தகுதியான எலக்ட்ரீசியன் அங்கு இல்லை. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி நடக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் செயல்படாததே உயிரிழப்புக்கு காரணம். வென்டிலேட்டர் பேட்டரி பேக்-அப் போதுமானதாக இல்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை என்பதால் பீப் பீப் என்று சவுண்ட் வந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். இறந்துபோன நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும். ஏனென்று சொன்னால், இது தமிழக அரசுடைய தவறால் ஏற்பட்ட இழப்புகள் ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மருத்துவத்துறை போன்றவற்றின் கவனக்குறைவால்தான் இது நடந்துள்ளது. மருத்துவர்கள் கூறுவது முற்றிலும் பொய். தமிழக அரசு கும்பகர்ண அரசாக செயல்படுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சரியாகச் செயல்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து மற்றும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு தனியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். ஜெனரேட்டரும் முறையாக வழங்கிட வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 15-ஆம் தேதி மாநில அளவில் மருத்துவர்கள் கலந்துகொள்ளும் போராட்டம் நடைபெறும்.” என்றனர்.
-அதிதேஜா