Advertisment

நிவாரண தொகை தொடர்பாக கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்..! 

Government of Tamil Nadu responds to  grace banu case regarding relief amount ..!

Advertisment

மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்க்ளுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisment

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்பதால், உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe