/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt444 (1)_13.jpg)
அண்ணா பிறந்தநாளையொட்டி, நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனைகைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் இன்று (25/11/2021) வெளியிட்டுள்ளார். அரசாணையில், 'சிறைக் கைதிகளைச் சட்டத்திற்குட்பட்டு விடுதலைசெய்ய வேண்டும். வன்கொடுமை, பயங்கரவாதம், மதம், சாதிமோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)