Government of Tamil Nadu provides house to boy Abdulkalam's family!

அண்மையில் அப்துல்கலாம் என்ற பள்ளி சிறுவன் ஒருவன் இணையதள பேட்டி ஒன்றில் மனித நேயம் குறித்து பேசியிருந்தது வைரலாகி இருந்தது.

Advertisment

மாணவன் அப்துல் கலாம் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டாலும் வாடகை வீட்டில் வசித்து வரும்தாங்கள்வெளியேறும் சூழல் ஏற்பட்டதாக சிறுவனின் தயார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு, நேற்று தமிழக முதல்வரை குடும்பத்துடன் மாணவன் அப்துல் கலாம் சந்தித்தான்.

Advertisment

இந்நிலையில் சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு சென்னை கே.கே.நகரில் உள்ள சிவலிங்கபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டினை தமிழக அரசு வழங்கியுள்ளது. தான் போலீசாக ஆசைப்படுவதாகச் சிறுவன் அப்துல் காலம் தெரிவித்துள்ளான்.