Advertisment

“குவாரிகள் விதிகளுக்குட்பட்டு செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்” - நீதிமன்றம் அறிவுறுத்தல்!

publive-image

உரிமம் விதிகளுக்குட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடுஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா, திருநீர்மலை நகர பஞ்சாயத்தில் விதிகளை மீறி செயல்படும் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து, குவாரியை மூட உத்தரவிடக் கோரி உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிகளைமீறி செயல்படும் குவாரியை மூடக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனமனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளுக்குட்பட்டு குவாரிகள் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடுஅரசுக்கு அறிவுறுத்திவழக்கை முடித்துவைத்தனர்.

quarry highcourt Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe