ADVERTISEMENT

'சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி நல்லாட்சி நடத்தி வருகிறது தமிழக அரசு'-மு.க.ஸ்டாலின் பேச்சு!  

04:10 PM Apr 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டது. கரோனாவால் உயிரிழந்த 450 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும், தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திய மக்களின் மனசாட்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இருக்கிறார். சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி நல்லாட்சியை நடத்தி வருகிறது தமிழக அரசு. உச்சநீதிமன்ற நீதிபதி தமிழகம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.சட்டத்தின் குரலாகவும், மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் இருக்கின்றனர்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT