Published on 08/06/2021 | Edited on 08/06/2021

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட 15 அத்தியாவசிய கரோனா தடுப்பு பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, மூன்று அடுக்குகள் கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றுக்கு தரத்தைப் பொறுத்து அதிகபட்சமாக 4 ரூபாய் 50 காசுக்கு மட்டுமே விற்க வேண்டும் என விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. என்-95 முகக்கவசத்தை 22 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சானிடைசர் 200 மி.லி 110 ரூபாய்க்கும், பிபிஇ கிட் உடை 273 ரூபாய்க்கும், ஆக்சிஜன் மாஸ்க் 54 ரூபாய்க்கும், பல்ஸ் ஆக்சிமீட்டர் 1,500 ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.