உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பழைய அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்ற புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.

Advertisment

Government of Tamil Nadu filing the affidavit

இதையடுத்து மறைமுக தேர்தலுக்கு எதிராகவும், இட ஒதுக்கிடு சரியாக பின்பற்றவில்லை என்ற காரணத்தைக் கூறியும், புதிய அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

Advertisment